அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொறிமுறை!
Thursday, November 3rd, 2022
………….
கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான, பொறிமுறையை வகுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கரைச்சி பிரதேச சபையின் எதிர்பார்ப்புக்களை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிதற்கு பிரதேச சபையின் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு வாரங்களில் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவதற்கான தீர்மானகரமான கூட்டத்தை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று(03.11.2022) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 40 கடைகளைக் கொண்ட கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும், அமைவிடம், போக்குவரத்து குறைபாடு, பிரதேச சபையின் சேவை சந்தையில் மொத்த வியாபாரமும் மேற்கொள்ளப்படுகின்றமை உட்பட பல்வேறு காரணங்களினால், பொருளாதார மத்திய நிலையத்தினால் உரிய பலனை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே இன்றைய கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. – 03.11.2022
Related posts:
|
|
|


