அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019

இந்த நாட்டில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் யாருடைய ஆட்சியில் காணாமற்போகச் செய்யப்பட்டனர் என்றொரு விடயம் தொடர்பில் சிலர் அத்தகைய சம்பவங்களை தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது தெரிந்தும் மூடி மறைத்தோ, அல்லது சுயநல அரசியலுக்காகவோ ஒரு வாதத்தினை கொண்டு வர முயற்சிக்கின்றனர். எமது பகுதிகளில் உரிமைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, இருந்து வந்துள்ள இந்த நாட்டின் ஆட்சிகளின் போதே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள்.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஈ.பி.டி.பியின் பெயரும் அடிபட்டது. இன்று உங்கள் ஆட்சியில், எங்கள் ஆட்சியில் காணமற்போனார்கள் எனக் கூறி அரசியல் செய்ய முன்வருவோரைப் போன்றே அன்றும் எம்மீதான அரசியல் பழிவாங்கல் என்கின்ற முறையில் சில தமிழ் அரசியல் தரப்புகளால் திட்டமிட்டு தூண்டப்பட்ட நிலையிலேயே இத்தகைய போலி குற்றச்சாட்டுகள் எம்மீது திணிக்கப்பட்டன என்பது எமக்குத் தெரியும். இதை எமது மக்களும் அறிவார்கள். இதன் காரணமாகவும்தான் இத்தகைய காணாமற் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என நாம் அப்போதிருந்தே இன்று வரையில் வலியுறுத்தி வருகின்றோம். இந்தத் தமிழ்த் தரப்புகள் இணைந்திருக்கின்ற இந்த ஆட்சியில் விசாரணைகளை ஏன் நடத்த முடியாது? என இப்போதும் இந்த விடயம் பற்றி எம்மீது குற்றம் சாட்டுகின்ற இந்த தமிழ்த் தரப்புகளிடம் கேட்க விரும்புகின்றேன். எனவே கடந்த காலங்களில் இப்படித்தான் பல்வேறு அரசியல் கொலைகள் குறித்து எமது கட்சி மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன. இந்த ஆட்சியில் அக்கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையான குற்றவாளிகள் யார்? யார் என்பது இப்போது இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. அதேபோன்று இந்த வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை பக்கசார்பற்ற வகையில் மேற்கொள்ளுங்கள், உண்மைகள் அப்போது வெளிவரும்

Related posts:


பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...
மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
வெளிப்படைத் தன்மையுடன் மீளாய்வு செய்து சேவை மூப்பின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் – சுகாதாரத் த...