அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!

Tuesday, January 22nd, 2019

சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக பணிபுரியும் தமிழ் இளைஞர் யுவதிகள் தமது பணி இடைநிறுத்தப்பட்டுவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவை தேவையில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் இத்தொழில் வாய்ப்பை எந்தவகையிலும் இடைநிறுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கிளிநொச்சி முரசுமோட்டையிலுள்ள கோரக்கன் குடியிருப்பு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர். முன்பள்ளி அசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அழிவு யுத்தத்திற்கு முகங்கொடுத்து மீண்ட எமது மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் இந்த தொழில் வாய்ப்பு அவர்களுக்கு பெரிதும் பக்கபலமாக இருந்தவருகின்றது.

போராட்டம் என்பது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு இலக்கை நோக்கி பெறப்படுவது ஒன்றாகும்.  எமது மக்களின் உரிமைக்காக போராடியவர்கள் நாம். அந்தவகையில் இயக்கங்களின் வேறுபாடுகளை பார்ப்பது கிடையாது. எமக்கும் இதர இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடானது போராட்ட வடிவில்தான் இருந்திருக்கின்றது.

சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான எமது இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்புக்களை பெற்று தமது குடும்ப பொருளாதார தேவையை ஈடுசெய்து வருகின்றார்கள். இன்றும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்கள் கிடைக்காமலும் சுயபொருளாதார உதவிகள் கிடைக்காமலும் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

அவர்களின் வறுமையை போக்க வேலைவாய்ப்புக்களை உருவாக்கால் வெறுமனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலை செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சித்தரிப்பதும், விமர்ச்சிப்பதுமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்காது இருப்பதையும் பறிகொடுக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது சிவில் பாதுக்காப்பு திணைக்கத்தின் தலையீட்டை விரும்பாத இதர தமிழ் அரசியல் கட்சிகள் முதலில் அந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாற்றுத் திட்டத்தை கொண்டுவந்தபின்  தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

தற்போது உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் இந்த தொழில்வாய்ப்ப இழக்கப்பட்டுவிடும் என்ற அச்ச நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அவ்வாறான நிலைமை உருவாக நாம் இடமளிக்கப் போவதில்லை. அந்தவகையில் தேவையற்ற சங்கடங்களை விடுத்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது சமூகத்திற்கும் சிறந்த வழிகாட்டிகளாக நின்று உழைக்க நீங்கள் உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் உங்களது சுமைகளை ஆற்றுப்படுத்தக்கூடியவர்களுக்கு, மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கான அரசியல் தெளிவுகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் சென்று எதிர்காலத்திலாவது தமிழ் மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமையை உருவாக்க வழிவகை செய்யுங்கள்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் உங்களது பிரச்சினைகள் மட்டுமல்ல ஏனைய அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் குறுகிய காலத்தில் தீர்வுகளை பெற்றுத்தர நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

IMG_20190122_142458

IMG_20190122_144237

IMG_20190122_142039

IMG_20190122_142018

IMG_20190122_141957

Related posts:


நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கையை முன்னெடுங்கள் - அதிகாரிகளுக்கு அமைச்ச...
செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட...