அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Monday, December 4th, 2017

வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. சுகாதாரத் தொண்டர்களாக கடந்த அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களிலிருந்து பணிபுரிகின்ற சுமார் 820 சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

இது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். இவர்களில்; தகைமை வாய்ந்தவர்கள் – அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர். அவர்களை முதற்கட்டமாக நிரந்தரமாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஏனைய தகைமை கொண்டிராதவர்களுக்கு அத் தகைமையினை அவர்கள் பூர்த்தி செய்கின்ற வரையில் ஒரு கால அவகாசத்தனை வழங்கி அவர்களையும் உள்ளீர்க்க முடியும் என தெரிவித்துள்ளார் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – வடமராட்சியில் அமைச்சர்...

நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே - ...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...
அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வ...