பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, December 21st, 2020

எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் என்பது எமது சந்ததியின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விடயம்.  எமது சந்ததி என்று நான் குறிப்பிடுவது – தமிழக கடற்றொழிலாளர்களையும் சேர்த்துத்தான். எனவே இதனை யாரும் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்த முயற்சிக்கப்படுமாயின் தமிழக மக்கள் அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது முழுமையான நேர்காணல் –  

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு மீனவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள போவதாக சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கின்றது.?

குறித்த விவகாரத்தினை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு தொடர்ச்சியாக மேற்கொண்டமுயற்சியின் பலனாக இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது..

அண்மைய சில நாட்களாக வீம்பு பண்ணுவது போன்று வடக்;கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் இடம்பெற்று வருகின்றதன் விளைவாகத்தான் இலங்கை மீனவர் தரப்பிடம் இருந்து நீங்கள் தெரிவிப்பது போன்ற கருத்துக்கள் வெளியாகியிருப்பதை அவதானித்திருந்தேன்.

இந்த விடயத்தில் இரண்டு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படாத வகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடாக இருக்கின்றது. இந்த விருப்பம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கும் பிராந்திய பூகோள அரசியலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என்று கருதுகின்றீர்களா?

ரோலர் என்று சொல்லப்படுகின்ற இந்திய இழுவைவலைப் படகுகள் பலவற்றின் உரிமையாளர்களாக தமிழகத்தின் அரசியல்வாதிகளே இருப்பதாக சொல்லப்படுகின்ற நிலையில்>தற்போது இந்தியாவில் மத்திய ஆட்சியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தமிழகத்தல் ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க. இடையில் ஒரு உறவு காணப்படுகின்றது.

மறுபுறத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் உட்பட தற்போதைய எமது அரசாங்கத்தின் நகர்வுகள் சில மோடி அரசாங்கத்தினால் திருப்தியடையும் வகையில் இல்லை என்பதை இந்தியத் தரப்புக்களுக்கு சார்பானவர்கள் வெளிப்படுத்ததுகின்ற கருத்துக்களில் இருந்து உணரக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான எடுகோள்களின் அடிப்படையில்தான்>உங்களின் இந்தக் கேள்வி அமைந்திருப்பதாக கருதுகின்றேன். எம்மைப் பொறுத்த வரையில்>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருமே பக்கம் சாராத நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையையே இந்;த அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்பதை தெளிவாக தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் இலங்கையினுடைய பொருளாதார நிலை>எமக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வருகின்றவர்களை வரவேற்க வேண்டிய தேவையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

உதாரணத்திற்கு அண்மையில்>இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் என்னைச் சந்தித்துதங்களுடைய அபிவிருத்தி திட்டத்தில் எவ்வாறான கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை மற்றம் கடற்றொழிலாளர்களின் வாழ்வதார மேம்;பாடு தொடர்பான திட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார். கடற்றொழில் சார் மக்களின் நலன்சார்து இணைந்து செயற்படுவதற்கான எனது விருப்பத்தினையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்ற போது அமெரிக்காவிற்கு சமர்ப்பிக்கின்ற அபிவிருத்தி தொடர்பான வேலைத் திட்டங்கள் பூகோள அரசியல் நகர்வுகளினுள் சிக்கிக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றேன்.

இவ்வாறான விடங்களில் எனக்குத நிறைந்த அனுபவமும் நிறைவான புரிதலும் இருக்கின்றது. இப்போது மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலும் பாலஸ்தீனம் போன்ற வெளிசக்திகளின் ஒத்தசைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் அவை எவையும் இந்திய நலனை பாதிக்கக் கூடாது என்பதில் தெளிவாத இருந்தேன். இந்த விடயத்தினை அப்போதைய இந்தியத் தலைவர்களும் திட்ட வகுப்பாளர்களும் புலனாய்வு அதிகாரிகளும் நன்கு பரிந்து வைத்திருந்தனர்

இதுபோன்றுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடும் இருக்கின்றது. எங்களுடைய மக்களின் தேவைகள் – நலன்கள் சார்ந்து அனைத்து தரப்பினருடனும் இணக்கமான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகவே நம்புகின்றேன்.

எதுஎவ்வாறிருப்பினும்>எல்லை தாண்டுகின்ற இந்திய மீனவர் விவகாரம் என்பது எமது சந்ததியின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விடயம்.  எமது சந்ததி என்று நான் குறிப்பிடுவது ௲ தமிழக கடற்றொழிலாளர்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். எனவே இதனை யாரும் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்த முயற்சிக்கப்படுமாயின் தமிழக மக்கள் அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்களில்ஈ.பி.டி.பி. க்குள் ஒரு குழப்பமான நிலை காணப்படுகின்றதே?

இல்லை..மிகவும் தெளிவான நிலையில் இருந்து நாம் எதிர்கொள்வதுதான வெளியாரின் பார்வைக்கு குழப்பம் போன்று தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.

இது தொடர்பாக கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?

எம்மைப் பொறுத்த வரையில் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவைகிராமிய மட்டங்களில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுகின்ற கட்டமைப்புக்கள். அதிகாரப் பகிர்வின் ஆரம்பம் என்றும் சொல்ல முடியும். எனவே> அங்கே யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதைவிட> எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதே முக்கயமானது.

கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் ஊடாகவும் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன்>நீண்ட காலமாக அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தி வருகின்ற கட்சி என்ற அடிப்படையில்>அதிகாரங்கள் பகிரப்படுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இதுபோன்ற காரணங்களினால்தான்>உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரவு செலவு திட்ட விவகாரத்தினை அரசியல் ரீதியாக பார்க்காது ஒவ்வொரு சபைகளினதும் செயற்பாடுகளை ஆராய்ந்து ஈ.பி.டி.பி. தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஒவ்வொரு பிரதேத்திலும் யார் ஆட்சியை நடத்தப் போகின்றார்கள் என்பது தொடர்பாக நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளில் கடந்த காலத்தில் காணப்பட்ட வினைத்திறன் – வெளிப்படைத் தன்மை மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் போன்றவற்றை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம்.      

அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றவர் நீங்கள். ஆனால்>உங்களுடைய தீர்மானங்களினால் சில சபைகளின் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் இருந்து கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளதே.. உதாரணத்திற்கு கிழக்கில் உப்புவெளியை சொல்ல முடியும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களுடைய இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அங்கே அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றோம்.

90 களில் எமக்கு இருந்த குறித்த அக்கறையினால்தான் இப்போதும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். அவை வரலாறுகள்.

ஆனால்>தற்போது சில சபைகளை எடுத்துக் கொண்டால் – சரி நீங்கள் சொல்வது போன்று உப்புவெளிப் பிரதேச சபையியையே எடுத்துக் கொள்வோமே.. குறித்த பிரதேச சபையின் மக்கள் நலன்சார் செயற்பாடு என்பது கடந்த காலத்தில் மோசமானதாவே இருந்திருக்கின்றது. குறிப்பாக அங்கே இருக்கக் கூடிய அதிகாரிகள் சிலரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பிரதேச மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கின்றது. அவ்வாறானவர்களை கட்டுப்படுத்துகின்ற திராணிகூட இல்லாத சபையாகவே அங்கே நிர்வாம் நடைபெற்றிருக்கின்றது.

நான் பொதுவாக அதிகாரிகளை குற்றஞ் சுமத்தவது கிடையாது. அரசியல் தலைமைகள் சரியானவையாக இருக்குமாயின்> அதிகாரிகள் சரியாக நடப்பார்கள் என்பதுதான் நான் பெற்றுக் கொண்ட அனுபவம்.

சரி>கடந்த காலத்தை விட்டு விடுவோம். எதிர்காலம் தொடர்பாகக்கூட மக்கள் நலன்சார் திட்டங்களைஅவர்கள் முன்வைக்கவில்லை. வெறுமனே ‘தமிழ் மக்களின் கைகளில் இருந்து அதிகாரங்கள் சென்று விடக்கூடாது’ என்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளின் ஊடாக அதிகாரத்தினை தக்க வைக்க முயலுகின்றார்களே தவிர வேலைத் திட்டம் என்று எதுவுமே இல்லை.

அவர்களுடைய போலித்தனங்களுக்காக மக்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை நாங்கள் அநியாயமாக்க கூடாது. அதனால்தான்>எமக்கு மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற உறவுகளைப் பயன்படுத்தி>சில மக்கள் நலன்சார் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக உத்தரவாதங்களை பெற்றுக் கொண்ட பின்னர் ஆதரவினை தெரிவித்திருந்தோம். 

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆதரவளித்தாக கூறுகின்றீர்கள் – அண்மையில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலிலும் அபிவிருத்தியை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தீர்கள். இவை> அரசியல் அபிலாசைகள் தொடர்பான உங்களின் கருத்தியலில் ஏற்படும் மாற்றம் என்று கொள்ளலாமா?

(சிரிக்கிறார்) ‘சலசலப்புத் தேவையில்லை பலகாரம் தான் முக்கியம்’ என்று நான் அடிக்கடி சொல்லி வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அந்தவகையிலே> தமிழ் மக்களுக்கு கௌரவமான வாழ்வும் அரசியல் உரிமையும் உறுதிப்படுத்;தப்பட வேண்டும் என்று 70 களின் நடுப் பகுதியில் எனக்கு ஏற்பட்ட சிந்தனைக்கு அமையவே இன்றுவரை நகர்வுகள் அமைந்திருக்கின்றன. எனினும்>அவை தொடர்பாக மேடை போட்டு சலசலப்புக் காட்டாமல் தேசிய நல்லிணக்கம் என்ற பொறிமுறையின் ஊடாக நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்கு தெரியும் கடந்த சில மாதங்களாக மாகாணசபை முறைமை தொடர்பாகவும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக போலித் தமிழ் தேசியவாதிகள் ஒப்பாரி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அரசியல் விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடிக்கின்ற சிலரின் அலப்பறைகள் தாங்கவே முடியாமல் இருந்தன.

அப்போது ஊடகங்கள் பலவும் என்னிடம் குறித்த விடயம் தொடர்பாக கருத்துக் கேட்டிருந்தன. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை மழுமையாக அமுல்ப்படுத்துவதினை ஆரம்பமாக கொண்டு முன்னோக்கி நகர்வதே என்னுடைய அரசியல் இலக்கு என்பதை வலியுறுத்தியிருந்தேனே தவிர. சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

ஆனால் இப்போது என்ன நடந்திருக்கின்றது? மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கருத்துக்களை பரிமாறியிருக்கின்றார். இதன் ஊடாக எமது அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேபோன்றுதான் 2008 ஆண்டு கிழக்கு விடுவிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலையும் 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலையும் நடத்தியிருந்தோம்.

ஆனால் துரதிஸ்டம்>குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு பின்னால் இருந்த நகர்வுகள் -சகிப்புத் தன்மை -பொறுமை போன்றவற்றின் பெறுமதியை மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை. குறிப்பாக வடக்கு மக்கள்;>பெறுமதியை உணர்ந்து கொள்ளாமல் பெறுமதி அற்றவர்களின் கைகளில் அதிகாரங்களை கொடுத்தனர்.. அந்தப் பெறுமதி அற்றவர்களினால் மககளுக்கு எந்தவிதமான வெகுமதிகளையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ம்ம்ம.. (ஏமாற்றப் பெருமூச்சு விடுகிறார்)

சரி>நாம் கேட்ட கேள்விக்கு வருவோம். குறித்த இலத்திரனியல் ஊடக நேர்காணலில்>நீங்கள் கூறுவது போன்ற புரிதல் ஏற்பட்டிருக்குமாயின்> அது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் சில குழப்பத்தினை ஏற்படுத்தியிருக்கலாமே தவிர> என்னுடைய கருத்தாக அமையாது.

நான் அங்கே வெளிப்படுத்த விரும்பியது என்வென்றால்> அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில்> இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கிடைத்த வாய்ப்பை> தட்டிக்கழித்தும் (புலிகள்)- தவாறாக பயன்படுத்தியதன்(ஈ.பி.ஆர்.எல்.எப்.) மூலமும் தவறவிட்டதன் பின்னர் சுயநலத் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த அழிவுகளில் இருந்து மீண்டு வருவதற்காக தற்போதும் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பது போல>தரமான வாழ்வியல் இல்லாதவர்களினால் அரசியல் அபிலாசைகளைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது. எனவே>மக்களின் மனங்களில் அரசியல் அபிலாசைகள் தொடர்பான உறுதியை முனை மங்காமல் முன்னகர்த்துவதற்கு அன்றாடப் பிரச்சினைகளையும் அத்தியாவசியப் பிரச்சினைகளையும் அடிப்படையாக கொண்ட அபவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி நகருவதே சிறப்பானதாக இருக்கும்.

அதைவிட என்னை ஆயிரக்கணக்கான மக்கள் சந்திக்க வருகின்றார்கள். அவ்வாறு வருகின்றவர்கள் அனைவரும் அபிவிருத்தி சார்ந்த கோரிக்கைளோடு வருகின்றார்களே தவிர, யாரும் அரசியல் உரிமை பற்றி என்னிடம் பேசுவதில்லை. இதைத்தான் இலத்திரனியல் ஊடகத்திற்கும் கூறியிருந்தேன்.

Related posts: