85 வீதமான மருந்துகள் உள்நாட்டிலேயே தாயரிப்பு – அமைச்சர் ராஜித!

Sunday, June 17th, 2018

நாட்டுக்குத் தேவையான 85 வீதமான மருந்துகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பாரத்துள்ளதாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இரத்ததானத்தின் போது இரத்த பிளாஸ்மா நீக்கப்படுவதாகவும் ஆண்டொன்றுக்கு பிளாஸ்மா பரல்கள் வீசப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீசப்படுகின்ற பிளாஸ்மாக்கள் மூலம் மருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும் அதன்படி இந்த நாட்டில் வீசப்படுகின்ற இரத்த பிளாஸ்மாக்கள் 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாகவும் அதன்மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டுக்குத் தேவையான 85 வீதமான மருந்துகளை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து முடிப்பதற்கு 48 நிறுவனங்களுடன் தற்போது ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

Related posts: