ஶ்ரீலங்கா எயார்லைனஸ் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!
Sunday, December 24th, 2017மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் இந்தக் குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி கிடைக்கப் பெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்
Related posts:
வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்படாது - அமைச்சர் ம...
நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்குகள் கப்பலொன்றில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
|
|