வித்தியா கொலை: இன்று முக்கிய சாட்சிப்பதிவு!  

Thursday, July 20th, 2017

கூட்டு வன்பணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான முக்கிய சாட்சியப்பதிவு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கை விசாரணை செய்த குற்றப்புலனாய்வு பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று தனது சட்சியத்தை வழங்கி வருகின்றார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்கம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில், குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது.

வழக்கின் விசாரணைகள் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் மேலதிக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு, வழமைக்கு மாறாக நீதிமன்றின் உள்ளேயும் வெளியேயும் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது

Related posts: