மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல் ஜனாதிபதியின் கையில்!

போதைப் பொருள் சம்பந்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளின் பட்டியல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இந்தப்பட்டியலை நீதியமைச்சு தயாரித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் பல்வேறு வகையில் தொடர்ந்தும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
முரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த சில தினங்களில் நீதியமைச்சுடன் கலந்துரையாட எண்ணியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்காக துரிதமாக எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நி~hந்தனசிங்க தெரிவித்தார். குறிப்பாக மரண தண்டனையை நிறைவேற்றும் நபரின் பணியிடம் வெற்றிடமாக இருப்பதால் அந்த பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|