பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!

Monday, May 6th, 2019

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 31 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் மாரவில நகரத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – முகுனுவட்டன பிரதேசத்தை சேர்ந்த அஜித் பிரசன்ன என்ற 31 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாரவில நகரத்தில் நேற்று இரவு நின்ற சிலரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன் போது அவர்களில் ஒருவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காயம் அடைந்த இளைஞனை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: