பிரதமர் ரணில் சீனா பயணம்!

Saturday, May 6th, 2017

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு சீனா­விற்கு செல்­லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்­ளிட்ட உயர் மட்டத்தினரை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­ரம, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகி­யோரும் செல்ல உள்­ளனர். எதிர்­வரும் 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு வரு­கின்ற நிலையில் மறுநாள் பிர­தமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: