பாடசாலை மாணவர்கள் பார்வையிட இலவசம்!

Saturday, September 30th, 2017

எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினங்களை முன்னிட்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை இலவசமாக பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது

நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன இதனைத் தெரிவித்துள்ளார்.60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல விலங்கியல் பூங்கா மற்றும் யானைகள் சரணாலயம் என்பனவற்றை இலவசமாக பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், பேராதனை தாவரவியல் பூங்கா, ஹக்கலை தாவரவியல் பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை மிர்ஸ்ஸவில உலர்வலய தாவரவியல் பூங்கா என்பனவற்றை இலவசமாக பார்வையிடவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது

Related posts: