தற்கொலை விளையாட்டால் தமிழ் மாணவன் பலி!

Friday, September 1st, 2017

இந்தியா – மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையாடியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக யாருடனும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடியுள்ளார்.ஆட்டத்தின் முடிவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் விக்னேஷின் இடது கையில் நீலத் திமிங்கலத்தின் படம் வரையப்பட்டுள்ளது. Suicide Game எனப்படும் புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.நன்றாக படிக்கக் கூடிய தமது மகன் விஷம விளையாட்டினால் உயிரிழந்ததைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் கலங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - எதிர்வரும் திங்கள்முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என இ...
அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது - ஜனாதிபதி கோ...
இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தின...