கைது செய்யபட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அதிகாரியும் சர்வதேச தங்கக் கடத்தலும்

சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனதின் விமான உதவியாளர்களும் ,தள உத்தியோகத்தர்களும் தங்கக் கடத்தலுக்கு மீண்டும் பயன் பயன்படுத்தப் படுகிறார்களா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் காரர்கள் மீண்டும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் விமான உதவியாளர்களை பயன்படுத்தி நாட்டிற்குள்ளும் வெளியேயும் தங்கத்தைக் கடத்தி வருகின்றனர்.
27வயது நிரம்பிய முன்னாள் மிகின் லங்கா விமானத்தின் உதவியாளரான ஆராச்சிகே சானுக என்பவர் அண்மையில் இரண்டு விமான சேவைகளும் இணைக்கபப்ட்ட போது சிறீலங்கன் எயர்லைன்ஸ்சில் இணைந்து கொண்டுள்ளார். இவர் சுங்கத்துறை அதிகாரிகளால் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டபோது, 6.5கிலோ தங்கத்தைக் கடத்த உதவினால் தனக்கு 40,000 ரூபாய் தருவதாக கடத்தல் காரர்கள் உறுதியளித்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் கடத்தி வந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 35 மில்லியன் ரூபாய் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் தேசிய விமான சேவையில் ஈடுபட்டிருந்த விமான பணியாளர்கள் தங்கக் கடத்தலுக்கு குருவிகளாகப் பயன்படுத்தப் பட்டதும் சிலர் இது தொடர்பில் கைது செய்யப் பட்டதும் குறிப்பிடதக்கது
Related posts:
|
|