களுத்துறையின் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி !

Friday, May 26th, 2017

 

நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் களுத்துறை, புளத்சிங்கள ,வெயங்கல்ல மற்றும் அகலவத்தை பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய – மொரவகந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்ப...
தொடர் மழை - வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரி...