கடலுணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு – ஏற்றுமதியும் வீழ்ச்சி!

Thursday, August 2nd, 2018

மீன்பிடிபாடு திடீரென குறைவடைந்ததை அடுத்து குடாநாட்டில் கடலுணவு வகைகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் நுகர்வோர் சிரமப்படுவதோடு தென்பகுதிக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வறட்சியான காலநிலை என்பதால் கடலுணவுகளின் பிடிபாடு மிகவும் குறைந்தே காணப்படுகின்றன.

மீனவர்களின் வலையில் போதிய கடலுணவுகள் பிடிபடாத நிலையால் சந்தைகளுக்கு அவற்றின் வருகை மிக வீழ்ச்சியடைந்தும் காணப்படுகின்றன. அத்துடன் விலையும் அதிகரித்து காணப்படுவதோடு உடனடியாக விற்று தீர்ந்து விடுகின்றன.

குறிப்பாக யாழ் நகரை அண்டிய பாஷையூர், குருநகர், நாவாந்துறை, கொட்டடி போன்ற மீன் விற்பனை சந்தைகளிலேயே இவ்வாறு கடலுணவுகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

Related posts: