எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்!

Wednesday, October 31st, 2018

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்குள் பிரதமராகவே இருக்கட்டும். புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியில் இருந்து நாட்டை அபிவிருத்தி செய்யவார்.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசாங்கம் நிச்சயமல்லாத ஒன்று. அது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் எந்தவொரு பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை.

தேர்தல் ஒன்றை நடத்தி, அதன்மூலம் ஏற்படுத்தப்படும் அரசாங்கத்திலேயே பதவிகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது புதிய அமைச்சரவையின் கீழ் மக்களுக்கு ஆதரவு வழங்கி அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்ல வேண்டும். அதன் பின்னர் மக்கள் மத்தியில் சென்று மக்களின் விருப்பதுடன் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஆரம்பம் முதலே வெளிநாட்டு அழுத்தங்கள் உள்ளது. எனினும் எந்தவொரு நாடும் அவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து வேலை செய்வதில்லை.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாட்டிலுள்ள அரசியலமைப்பிற்கமைய தான் கூறப்படுகின்றது. அப்படியின்றி வெளிநாடுகளுக்கு அவசியமான முறையில் எங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தை அழைக்க முடியாது என கோத்தபாய மேலும் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts:

அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் யோசனைக்கு அமைச்சரவை அனு...
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் - ஜனாதிபதி ர...