அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!

Job Monday, May 14th, 2018

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று  திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளது.

இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


தொழிலாளர்  சேமலாப நிதி வரிவிதிப்புக்கு  தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு!
நாடு திரும்புவதில் அதிருப்தி வெளியிட்டுள்ள மியன்மார் நாட்டைச் சேர்ந்த முஸ்ஸிம்கள்!
போலீஸ் தாக்குதலை கண்டிக்கும் ஜே.வி.பி
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி!
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட எவரும் மன்னாரில் இல்லை - பிராந்திய உதவி சுகாதாரப் பணிப்பாளர் !