அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த விலங்குகள் !!

Monday, September 2nd, 2019

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயில் இருந்து தப்பி வந்த விலங்குகளை தன்னார்வலர்கள் மீட்டு முதலுதவி, சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் ஏழை நாடாகவும், பல்லுயிர் பெருக்கத்தில் பணக்கார நாடாகவும் திகழும் பொலிவியாவின் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களை அமேசான் காட்டுத் தீ அழித்துள்ளது.

அதில், பல தாவரங்களோடு, விலங்குகளும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. காட்டுத் தீயின் வெப்பத்தில் இருந்து தப்பி வந்த விலங்குகளை வன உயிர் ஆர்வலர்கள் மீட்டு வருகின்றனர்.

உடல் பாகங்கள் கருகிப் போய், கண் போன்ற பாகங்களை இழந்த பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட விலங்குகளும் இதில் உள்ளன. அவை தீயைக் கண்ட மிரட்சியில் இருந்து மீளவே சில நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், முதலுதவிக்குப் பின், வனம் சீரானால் அவற்றைத் திருப்பி காட்டுக்குள் அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் வனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விலங்குகளுக்கு குடிநீரையும் ஏற்பாடு செய்து வைத்து மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

Related posts: