திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது.

Friday, July 5th, 2019

திருகோணமலை வரோதயநகர் கந்தையா  வீதியின் இரு பிரதான  வீதிகள் செப்பனிடப்பட்டன.

இவ்வாண்டுக்கான பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் பாலகணேசன் அவர்களது முயற்சியால் இவ்வீதிகள் செப்பனிடப்பட்டன

நீண்டகாலமாக சீரமைக்கப்படாது காணப்பட்ட இவ்வீதியால் இப்பிரதேச மக்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர். இந்நிலையில் குறித்த பகுதி மக்களால் ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மக்களது தேவைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற கட்சின் நிலைப்பாட்டுக்கு அமைய அதற்கான தீர்வு கண்டு கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: