வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2023

தென் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவருமே ஆளுங்கட்சியில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றனர். ஆனால், வடக்கு – கிழக்கில் போட்டியிடுகின்றவர்களின் மனோபாங்கு இதற்கு மாறானது.

அவர்கள் எதிர்க் கட்சியிலேயே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு இருந்தால் பதவி மட்டும் சரி, மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அவர்களது கொள்கை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாடாளுமன்ற முழுமையான உரை – 22.11.2023

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்றைய தினம் மேன்மைதங்கிய ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு ௲ செலவுத் திட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் எனது கருத்துக்களையும் முன்வைப்பதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கியமை குறித்து முதலில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல. அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம் கோடுப்பேனேயன்றி சுயலாபம் கருதிய பூகோள அரசியலுக்கு அல்ல என்பதையே நான் வழமையாகக் கூறி வருவதுண்டு. இதனையும் திரிபுபடுத்திய சிலர் பூகோள அரசியலுக்கு நான் எதிரானவன் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய அண்டைய நாடுகளின் பாதுகாப்பு என்ற வகையில் அவை தொடர்பில் மிக அதீதமான அக்கறை எனக்குண்டு. இவை பூகோள அமைப்பு சார்ந்தவை தொடர்பில் முக்கியமானவை. இந்த அமைப்பில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நானும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தபூகோளஅமைப்பில்பாதிப்புக்கள்ஏற்படாதவகையில்எனக்குக்கிடைத்திருக்கின்றஅமைச்சின்பணிகளைமுன்னெடுப்பதிலும்நான்எப்போதும்அவதானமாகவேஇருக்கின்றேன். அதற்காக, பூகோளஅரசியல்சொல்வதையெல்லாம்கேட்கவோ, செய்யவோவேண்டும்என்பதுபொருளல்ல. அந்தஅரசியலானதுஎமதுமக்களுக்குபாதிப்புகளைஏற்படுத்தாமல்வெறுமனேஇருந்தாலும்நல்லது, அல்லது, பாதிப்புகளைஏற்படுத்தாமல்உதவினாலும்நல்லதுஎன்பதேஎனதுநிலைப்பாடாகும். 

பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்த நாம் நாடு இன்று மெல்லென நிமிர்ந்து வருகிறது.தாகமெடுத்த கொக்குக்கு தாம்பாளத்தில் தண்ணீர் வழங்காமல்கூசாக்களில் நீர் இறைத்து தாகம் தீர்க்க எந்த நாடு வந்தாலும் நாம் அதை வரவேற்போம்,..ஆனாலும்,.. எமது தேசம்,  எமது மக்கள், எமது உரிமை, எமது மீள் எழுச்சி,. எமது நாடு,  எமது இறமை, எமது அயலுலகம்,..இவைகளை எம் நெஞ்சில் நிறுத்தியே சர்வதேச உறவுகளை நாம்இன்னமும் கொண்டிருக்கிறோம்.

எமது அயலுலக உறவுக்கும் எமக்கும் இடையில் சிண்டு முடிந்து விடும் அரசியல் சூழ்ச்சிகளும்  இங்கு அரங்கேறி வருகின்றன,  ஆனாலும் அந்த கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது.

நான் கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரேஎங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்றுகளத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன்,..ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டேகடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து கரிசனையோடு உழைத்த வரலாறுகளை எமது மக்கள் அறிவார்கள்.ஆகவே கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு  காண்பதற்கு யாரும்அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டை ஆழ்பவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட்டுப்பொறுப்போடு  உழைக்க முன் வாருங்கள்,மக்கள் உங்களுக்கு வாக்களித்தது  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு  காண்பதற்காகவே,மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல,..அல்லது ஊடக்கங்களுக்காக உரத்து கூச்சலிட்டுவிட்டுநாடாளுமன்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துவிட்டு போவதற்காக அல்ல.தென்னிலங்களை அரசியல் சக்திகள் தாம்  ஆளும் கட்சியாக  வென்றுமக்களுக்கு சேவாயாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.ஆனாலும் சக தமிழ தரப்பினர் பலரும் எதிர்ப்பரசியல் நடத்தி கொக்கரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.இத்தகைய சாபாக்கேடுதான் தமிழ பேசும் மக்களின் பிரச்சினைகள்தீராப் பிரச்சினையாக நீடித்து வரவும் காரணமாக இருந்து வருகிறது.

‘கொன்றால் பாவம், திண்றால் போச்சி’ என்ற நிலைப்பாடு, இதர தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனது மக்கள் என்பதே எனது மூச்சு. அந்த வகையில் ஏழு எழுத்துக்களில் தான் எனது மூச்சு இருக்கின்றது. இது எனது மக்களுக்கானது. ஆங்கில மொழியிலே லக்கி செவன் என்பார்கள். அது எமது மக்களுக்கானது. ஆனால், ஏனைய தமிழ்த் தேசியம் சப்புகின்ற சில அரசியல்வாதிகள் என்னைவிட எமது மக்களுக்கு அரைவாசி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதாவது ஏழரைகளாக இருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவர்களது செயற்பாடுகளும் இருந்து வருகின்றன.

பொதுவாக அரசியல் என்பது மாறி, மாறியே அமைந்து வருகின்றது. அது எந்த நாடுகள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால், எனது அரசியல் என்பது எனது மக்கள் சார்ந்த நலன்கனை கருதியதாக மட்டுமே இன்னமும் தொடர்கிறது.

இயக்க அரசியல் கட்சிகள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், சுயலாப அரசியல் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், ஊடகங்கள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும் இல்லாதிருந்தால் பிரபாகரனின் மனோ நிலையில் சில மாற்றங்கள் வந்திருக்குமோ? எனவும் சில நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு.

இந்த ஒட்டுண்ணிகள்தான், அவர் ஒட்டகத்தில் வந்து அடிப்பார், தங்க ரதத்தில் வந்து அடிப்பார், யானை மீதேறி வந்து அடிப்பார், பூனை மீதேறி வந்து அடிப்பார் என்றெல்லாம் அந்த காலத்தில் அவரையும் உசுப்பேத்தி, ஒருவித அதீத மாயைக் கற்பனாவாத பிம்பத்தினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இந்த பிம்பத்திலிருந்து இறங்கிவர இயலாத நிலையும் அவருக்கு இருந்திருக்கலாம்.

இத்தகைய அதே ஒட்டுண்ணிக் கூட்டத்தில் எஞ்சிய சிலதுகள்தான் இன்றும் புனைந்த, பொய்யான என்மீதான இத்தகைய கருத்துக்களை  திணித்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்கட்டும், இந்த நாடு எத்தகைய அரசியல், சமூகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உட்பட்டிருந்தது என்பதும், அத்தகைய நிலையிலிருந்து இந்த நாட்டினை மீட்டிட எவருமே முன்வராமல் வெறும் சாக்குப் போக்குக் கதைகளைக் கூறிக்கொண்டிருந்த நிலையில், இந்த நாட்டினை மீட்டிட முன்வந்தவர் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களே என்பதும் குறித்து நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.

அன்று இந்த நாட்டினைப் பொறுப்பேற்பதற்கு துணிவில்லாதவர்கள் இன்று எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் முன்வைத்துள்ள இந்த வரவு ௲ செலவுத் திட்டத்தினையும் எதிர்த்து, பிழைகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களால் இதை மட்டும்தான் செய்ய முடியும். அது அவர்களது அரசியல்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த SLDU எனப்படுகின்றSri Lanka Development Update இனது Time to Reset திட்டத்தில், 2023ல் இலங்கையின் பொருளாதாரமானது நூற்றுக்கு 4.3 வீதம் சுருக்கமடையும் எனவும், கேள்விகள் தொடர்ந்தும் பின்னடைவு காணல், தொழில் வாய்ப்புகள் மற்றும் வருமான இழப்புகள் உக்கிரமடைதல் மற்றும் விநியோகத் துறையின் வரையறைகள் உற்பத்திகளை மிகவும் பாதிப்புறச் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலக் கூறுகளை நோக்கிச் செல்கின்றபோது, உலக வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரான பாரிஸ் எச். ஹதாத் – செர்வோஸின்  (Faris H.Hadad௲ Zervos) கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இழப்பானது அரை மில்லியனுக்கும் மேலானது. மேலும் 2.7 மில்லியன் மேலதிக நபர்கள் வறுமைக்கு உட்பட்டுள்ளனர். இதனால், இலங்கையின் பொருளாதாரமானது ஆழமான பாதிப்புக்கு உட்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலுமொரு விடயத்தை வலியுறுத்துகின்றார். அதாவது, ‘நிலையற்ற பூகோள சூழலும் நாட்டின் பொருளதார விருத்தியினை குறிப்பிட்டளவு பாதித்துள்ளது’ என்கிறார்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு நாடு என்ற வகையில் நாம் தற்போதைய பொருளாதார சூழலில் இருந்து மீட்சி பெற இயலாது.

நிலையற்ற பூகோள சூழலானது , எமது நாட்டு பொருளாதாரத்தினைப் பாதிக்கின்றது என்றால். அது எமது மக்களையும் சேர்த்தே பாதித்து வருகின்றது. எனவே அதனை நிலைபேறானதாக ஆக்க வேண்டும். அதற்கும் சேர்த்துத்தான் நானும் பாடுபட்டு வருகின்றேன்.

எனவே, இத்தகைய சவால்கள் அனைத்துக்கும் முகங்கொடுகின்ற வகையிலேயே 2024ஆம் ஆண்டுக்கான வரவு ௲ செலவுத் திட்டத்தினை எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தயாரித்திருக்கின்றார்.     

பொருளாதாரத்தின் மீள் திருத்த ஏற்பாடுகள், தேசிய உற்பத்தியின் சரிந்த பகுதிகளை வலுவூட்டி மீளக் கட்டியெழுப்புதல், அதன் மூலமான வேலைவாய்ப்புகள் என்பன இங்கு முதலிடம் பெறுகின்றன.

இந்த வரவு ௲ செலவுத் திட்டத்தின் பெறுபேறுகளை எமது மக்களின் நலன்களுக்கென நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம் என்பதில்தான் அனைத்தும் தங்கியிருக்கின்றன.

எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் இதுவரையில் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் எவ்வாறு பயன்மிக்கதாக எமது மக்களுக்கு சாதகமாக்கிக் கொடுத்து வந்துள்ளோமோ, அவ்வாறே இந்த வரவு ௲ செலவுத் திட்டத்தினையும் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

இங்கு நாங்கள் மட்டுமல்ல. எமது மக்கள் வாக்களித்துள்ள, அல்லது எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டுள்ள ஏனையோருக்கும் இந்த கடப்பாடு இருக்க வேண்டும். மக்கள் அவர்களிடமும் போய் பிரச்சினைகளைக் கூறித் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாவிட்டால் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து எவ்விதப் பயனும் இல்லை.

தென் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவருமே ஆளுங்கட்சியில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றனர். ஆனால், வடக்கு ௲ கிழக்கில் போட்டியிடுகின்றவர்களின் மனோபாங்கு இதற்கு மாறானது. அவர்கள் எதிர்க் கட்சியிலேயே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு இருந்தால் பதவி மட்டும் சரி, மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அவர்களது கொள்கை.

எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில், நான் ஓர் அமைச்சராக இருந்தாலும் சரி அல்லது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி எமது மக்களின் பிரச்சினைகளைத், தேவைகளைத் தீர்த்து வைப்பதுடன், மேன்மைதங்கிய ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஏனைய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் விட்டு வைக்காமல் அவர்களையும் பின் தொடர்ந்து அவர்களால் தீர்த்து வைக்க முடிந்த எமது மக்களின்  பிரச்சினைகளை, தேவைகளைத் தீர்த்தும் வருகின்றேன். இதனால், அவர்கள் என்னை ஒரு கரைச்சல்காரன் எனவும் நினைக்கக்கூடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் எனது மக்கள் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றேன்.

அந்த வகையில் எனது மக்களுக்கு உதவி செய்து வருகின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும்,  அனைத்து அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் எனது மக்கள் சார்பாக எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பதத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

000

Related posts: