4 நாடுகளை சிவப்புப் பட்டியலில் இணைத்தது இங்கிலாந்து!

Saturday, April 3rd, 2021

உலகிலுள்ள 4 நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் பயண தடை பட்டியலில் சேர்த்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இவ்வாறு 4 நாடுகளை இங்கிலாந்து சிவப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.
இங்கிலாந்து புதிதாக பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்காளதேஷ் ஆகிய நாடுகளை இவ்வாறு சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 43 இலட்சத்து 64 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்திற்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் 4 நாடுகளுக்கு தற்போது இங்கிலாந்து தடை விதித்துள்ளது.
தடை அமுலுக்கு வந்த பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: