நாங்கள் துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை – அமெரிக்கா!

Friday, October 11th, 2019


வடக்கு சிரியாவில் குர்து கிளர்ச்சியார்களுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பாக தாங்கள் எந்த அனுமதி தரவில்லை என அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திரும்பப் பெற்றதை மைக் பாம்பியோ ஆதரித்து பேசினார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவிலும், சர்வதேச அரங்கிலும் எதிர்ப்பு குரல்களை உருவாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க ஒப்புதல் அளித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையல்ல எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: