துருக்கி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கம் – அமெரிக்க ஜனாதிபதி!

Thursday, October 24th, 2019


வடக்கு சிரியாவில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னர் துருக்கி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரிய எல்லையில் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்காக துருப்புக்களை அனுப்புவதற்கு ரஷ்யா, துருக்கியுடன் உடன்பட்டதை அடுத்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில், வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப்பெறுவதற்கு ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர், குர்திஷ் கிளர்ச்சியாளர்கக்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்தது. பின்னர், அமெரிக்காவின் தலையீட்டுடன் போர்நிறுத்த மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், துருக்கி மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தத்தை நிறுத்துவதாகவும், அண்மையில் ஒப்புக்கொண்ட போர்நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதாகவும் துருக்கி உறுதியளித்ததாக அவர் கூறியுள்ளார்.

Related posts: