சீனாவுக்கு எதிராக தொடரும் போராட்டம்- ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை!

Monday, September 30th, 2019

ஹாங்காங்கில் அரசுக்கு ஆதரவாகப் பேசிய சீன நபர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவில் வைத்து விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீண்ட நாட்களாக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பேசிய சீனாவைச் சேர்ந்த ஒருவரை போராட்டக்காரர்கள் சரமாரியாகத் தாக்கினர்.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

Related posts: