குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு !

Wednesday, October 2nd, 2019


நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் பெண்களை கடத்தி கர்ப்பமாக்கி குழந்தைகள் பிறந்த பின்னர் அக் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் குழந்தைகள் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்கிருந்து 19 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் என நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை 1400 டொலர்களுக்கும் பெண் குழந்தைகளை 800 டொலரிகளிற்கும் விற்றுள்ளனர். பிறந்த குழந்தைகள் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இதுவரை சிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: