ஒக்டோபர் 29 முதல் பெண்களுக்கான பேருந்து கட்டணம் இரத்து!

Friday, August 16th, 2019


டெல்லி அரசு பேருந்துகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி முதல் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அம்மாநில முதலமைச்சர், ரக்ஷா பந்தன் தினமான இன்று சகோதரிகளுக்கு பரிசு ஒன்றை அளிப்பதாக கூறி பெண்களுக்கான பேருந்து கட்டணம் இரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், கட்டணமின்றி பயணம் செய்யலாம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Related posts: