இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!

Monday, September 30th, 2019


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இந்தியாவின் பீகார் மாநில முசாபர்பூர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்து இந்திய வழக்கறிஞர் ஒருவரால் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் சுமார் 50 நிமிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் அணுசக்தி யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: