இந்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

Tuesday, August 13th, 2019

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதனால் அங்கு கலவரம் வெடிக்கக்கூடும் என கருதி ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் அனுப்பி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, சமீபத்தில் இந்தியாவில் இடம்பபெற்ற புல்வாமா தாக்குதலை போன்று இந்த தாக்குதலையும் பயங்கரவாதிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.