வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டும் – ஈரானில் நிறைவேறியது தீர்மானம்!

Monday, January 6th, 2020

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வரும் நிலையில், நாங்கள் 52 இடங்களை குறிவைத்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் வான்வழி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்க தூதர் மேத்யூ டியூலெருக்கு அனுப்பியுள்ள சம்மனில் ‘‘ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதாகும்.

இது சர்வதேச கூட்டணியின் ஒப்பு கொள்ளப்பட்ட பணிகளுக்கு முரணானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: