விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி நாசாவில் இருந்து ஓய்வுப்பெற போவதாக அறிவிப்பு

Saturday, March 12th, 2016

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் பணியாற்றிவரும் ஸ்காட் கெல்லி சோயூஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில்  340 நாட்கள் அங்கு தங்கி இருந்தார். விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு கடந்த 02 ந்தேதி  கஜகஸ்தான் பாலைவனப்பகுதியில் பத்திரமாக தரையிறங்கினார்.

அமெரிக்க விண்வெளி வரலாற்றிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெருமையை ஸ்காட் கெல்லி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கெல்லி  விண்வெளியில் இருந்த காலத்தில்  பூமியை விதம் விதமாக புகைப்படம் எடுத்து அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரது புகைப்படங்கள் மூலம் பூமியின் பிரமிக்கத்தக்க உருவங்களை, படங்களை நாம் காண முடிந்தது.

இந்நிலையில் அவர் வரும் ஏப்ரல் மாதம் 1-தேதி அன்று நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

 

Related posts: