வட கொரியாவை சீண்டவேண்டாம்  –  உலகமே அழிந்துவிடும்  எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!

Wednesday, April 26th, 2017

வடகொரியாவிடம் உலகை அழிக்கும் அணுகுண்டுகள் இருக்கிறது என அந்நாட்டின் கௌரவ குடிமகன் அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ் கூறியுள்ளார்.

வடகொரியாவின் கௌரவ குடிமகனாக கூறப்படும் அலிஜாண்ட்ரோவுக்கு அந்நாட்டில் நடக்கும் அனைத்து ராணுவ ரகசியங்களும் தெரியும். அதுமட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியும் இவர் தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் ஸ்பெயினின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், யாரும் வடகொரியாவை தொடவேண்டாம். அவர்களை தொட்டால் அவர்கள் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.

வடகொரியாவில் கிம் ஜாங்கின் ஆட்சியின் கீழ் மக்கள், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வன்முறைகள், குற்றங்கள் எதுவும் நடக்காமல் கட்டுப்பாட்டோடு வடகொரியா நாடு இருக்கிறது. எனவே, வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு. வடகொரியாவுடம் தெர்மோநியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்

Related posts: