15 ஆயிரம் பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் – பொலிஸ்  ஊடகப்பேச்சாளர்!

Wednesday, December 20th, 2017

 

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி ஆரம்பமானது.இதற்கமைவாக சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப்பேச்சாளருமான சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்ட விதிமுறைக்கு அமைவாக நாட்டில் எந்தவொரு இடத்திலும் எத்தகைய தேர்தல் ஊர்வலமும் நடத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலம் நடத்தப்படுவது தொடர்பிலான சட்டம் கடுமையாக நடத்தப்படும் என்று இது குறித்த சட்ட விதிகள் உள்ளடங்கிய வர்த்தமானி இடம் பெற்றுள்ளது. எவரேனும் பொலிஸாரின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது ஊர்வலம் நடத்தப்பட்டால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக பிரதி பொலிஸ் மா அதிபர் தேர்தல் அலுவலகத்தினால் கைது செய்யப்படுவார்கள். தேர்தல் முடிவடையும் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு பொலித்தீனை பயன்படுத்துவதும் முற்றாக தடைசெய்யப்படுள்ளது.

Related posts:

யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் திடீர் மரணம்: இலங்கையில் தொற்றாளர்களின்...
எரிபொருள் - மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறு...
இலங்கை பணியாளர்களுக்கு விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பு - ஜப்பான் இணக்கம் என இலங்கை வெளிநாட்டு வேலை ...

புலிகளுக்கு ஆதரவானோரின் அழுத்தங்களை கணக்கில் எடுக்கவேண்டாம் - அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது அஸ்க...
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!
இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்...