வடகொரிய உளவாளி தென் கொரியாவில் கோரிக்கை!

Friday, September 22nd, 2017

கடந்த 30 ஆண்டுகளாக தென் கொரிய சிறையில் இருக்கும் 90 வயதான வட கொரிய உளவாளி ஒருவர் தம்மை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு முக்கிய பணி நிமித்தமாக சென்ற Seo Ok-Ryol அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது தனிமை சிறையில் இருந்து வருகிறார்.

தற்போது 90 வயதாகும் நிலையில் தம்மை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள Seo Ok-Ryol, தாம் தென் கொரிய அரசுக்கு எதிராக எந்த குற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.பெரும்பாலான வடகொரியர்களை போன்று இவருக்கும் தென் கொரியாவில் உறவினர்கள் பல இருந்தும் தமது வாழ்க்கை வடகொரியாவில் முடிய வேண்டும் என் ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் Seo வடகொரியா செல்வதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே தென் கொரிய அரசாங்கத்திடம் விசுவாசியாக இருப்பேன் என உறுதிமொழி கையெழுத்து இட்டிருப்பதால் எஞ்சியுள்ள காலம் தென் கொரிய குடிமகனாகவே கருதப்படுவார்.இதனிடையே இவரைப் போன்று சிறையில் இருக்கும் மேலும் 17 முதியவர்களை வடகொரியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக ஆர்வலர்கள் களமிறங்கியுள்ளனர்.ஒருங்கிணைந்த கொரியாவின் தென் பகுதியில் பிறந்த Seo கொரியா யுத்த காலத்தில் வடகொரியாவுக்காக களமிறங்கியவர்.

மிக முக்கியமான அதிகாரி ஒருவரை அழைத்துவரும் பணிக்காக தென் கொரியா சென்ற Seo, அங்கு தமது பணி முழுமையடையாத நிலையில் சிக்கிகொண்ட அவரை தென் கொரிய அதிகாரிகள் கைது செய்தனர்.உளவாளிகளாக செல்பவர்கள் பிடிக்கப்படும்போது உயிரை மாய்த்துக்கொள்வது வழமை. ஆனால் தமக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை எனவும், இதனால் தென் கொரியாவில் தனிமை சிறையில் அடைபட்டுள்ளதாகவும் கூறும் Seo, தமது குடும்பத்தை மிகவும் நேசிப்பதாக தெரிவித்து கண்கலங்கியுள்ளார்.

Related posts: