வடகொரிய அதிபரை கொலை செய்ய சிங்கப்பூரில் திட்டம் : வெளியானது அதிர்ச்சி தகவல்!

Saturday, June 9th, 2018

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் அச்சம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஞாயி்ற்றுக்கிழமையன்று தனது இராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.
மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: