வடகொரியாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தென் கொரியா!

Wednesday, March 14th, 2018

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இதுவரை வடகொரியாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வட கொரியாவின் அழைப்பை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்கள் மற்றும் சந்திப்பு இடம்பெறும் இடம், நிகழ்ச்சி நிரல் குறித்த எந்த விவரங்களும் இன்னும் முடிவு தீர்மானிக்கப்படவில்லை.

அத்துடன், வட கொரியா மற்றும் அமெரிக்க இடையிலான சந்திப்பு தொடர்பாக வட கொரிய அதிகாரிகளிடம் இருந்து உத்தியோக பூர்வ பதில் எதுவும் வரவில்லை என தென் கொரிய ஒத்துழைப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரிய இந்த விடயத்தை எச்சரிக்கையுடன் அணுகுவதுடன், நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு அவர்களுக்கு நேரம் தேவைப்படுவதாகவும் தென் கொரிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: