லொறி கவிழ்ந்து விபத்து : பாகிஸ்தானின் 20 பேர் மரணம்!

Tuesday, November 21st, 2017

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக வளைவில் திரும்பிய லொறி கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைரபுர் பகுதியில் உள்ள தெரி என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிலக்கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லொறி கடும் பனிமூட்டம் நிலவியதால் வளையில் திரும்பிய லொறி திடீரென அருகில் வந்த வேன் மீது கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: