லிபிய கடலில்அகதிகள் படகு மூழ்கியதில் பலர் பலி! 10 பெண்களின் சடலங்கள் மீட்பு!

Friday, July 1st, 2016

லிபிய கடற்பரப்பில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகிலிருந்து 10 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகில் நீர் புகுந்ததன் காரணமாக மூழ்கியுள்ளதாகவும் இதனால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், 107 புகலிடக் கோரிக்கையாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இத்தாலி கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், படகு மூழ்கியதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும், படகிலிருந்த ஏனைய 106 பேரும் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இத்தாலி கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: