லண்டனின் பிக் பென் பல மாதங்கள் ஒலிக்காது

Wednesday, April 27th, 2016
லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது.1856-ம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்தக் கடிகார கோபுரத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை அவசரமாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இந்தக் கடிகாரத்தை நிர்மாணிக்க 13 ஆண்டுகள் பிடித்ததாம்.
இதனை பழுதுபார்க்க 4 கோடியே 20 லட்சம் டாலர் செலவாகும்.பிக் பென் என்ற இந்த பெயர் உண்மையில் 13.5 டன் எடையிலான ஒரு பெரிய மணி ஒன்றுக்கே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மணி ஒலிப்பதன் காரணமாக இந்த கோபுர கடிகாரத்துக்கு அது சூட்டப்பட்டு விட்டது.
முன்னதாக, இதனை நிர்மாணிக்க 2600 கன மீட்டர் செங்கல்லும், 850 கன மீட்டர் கருங்கல்லும் பயன்படுத்தப்பட்டதாம்.
மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு 2012இல் இதற்கு எலிஸபெத் கோபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது.இந்த கோபுர கடிகாரத்தின் மணி ஒலி பிபிசி ரேடியோ-4 இல் நேரடியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

Related posts: