ரஷ்ய போர் விமானங்களை தடுத்து நிறுத்திய பிரித்தானியா!

Saturday, May 14th, 2016

பிரித்தானியாவின் தைபூன் விமானங்கள் மூன்று ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய போர் விமானங்கள் உரிய சிக்னலை வழங்காததுடன் பிரித்தானிய பாதுகாப்பு பிரிவின் சிக்னலுக்கும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் மைக்கேல் ஃபல்லூன் கூறுகையில், ரஷ்யாவின் குறித்த போர் விமானங்கள் தங்களை அடையாளப்படுத்தக் கூடிய உரிய சிக்னலை வழங்கவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் அனுப்பிய சிக்னலுக்கும் உரிய பதில் ஏதும் வழங்கவில்லை. இதனால் எஸ்ரோனியாவின் அமாரி விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரித்தானிய தைபூன் விமானங்கள் அந்த விமானங்களை இடைமறுத்து என்று கூறியுள்ளார்.

Related posts: