ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Friday, September 16th, 2022

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பக்க அமர்வாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஒருவருக்கொருவர் முக்கிய நலன்களை ஆதரிப்பதற்காக ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதென அந்த நாட்டு ஜனாதிபதி கூறியதாக சீன அரச ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு, துருவ உலகத்தை உருவாக்கும் முயற்சிகள், ஏற்றுக்கொள்ள முடியாதவை என விளாடிமிர் புட்டின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தானை சென்றடைந்துள்ளார். அவர் இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: