ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்க்க விரம்பும் ட்ரம்ப்!

Sunday, January 15th, 2017

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.அனைத்து விதங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்குமாயின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை தகர்த்த முடியும் என ட்ரம்ப் கூறினார்.

அந்தவகையில் தீவிரவாதத்திற்கு எதிராகவும் ஏனைய போர் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கினால் இது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமிர் புட்டினுடன் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up.jpg.CROP_.promo-xlarge2

Related posts: