ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்த வேண்டுமென உக்ரேய்ன் கோரிக்கை!

Wednesday, March 8th, 2017

ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமென உக்ரேய்ன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரிய நீதிமன்றில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்படுவதாகவும் ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை ரஸ்யா வழங்கி வருகின்றது என குற்றம் சுமத்தி ரஸ்யாவிற்கு எதிராக ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரேய்ன் மனுத் தாக்கல் செய்துள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா முற்று முழுதாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: