ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, November 16th, 2018

ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என ரஷ்ய நெருக்கடி கால சூழல்கள் அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றன.

Related posts: