ரஷ்யாவின் யோசனையை நிராகரித்த இஸ்லாமியவாத போராளிகள்!

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிக் கொள்ள அனுமதிக்கும் ரஷ்யாவின் திட்டத்தை, அல் கயீதாவோடு தொடர்புடைய இஸ்லாமியவாத போராளிகள் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நூஸ்ரா முன்னணி என்று அறியப்பட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர், தனது அமைப்பு அலெப்போவில் இருக்கும் என்றும் சண்டையைத் தொடரும் என்றும் கூறினார்.
வியாழனன்று திட்டமிட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி பொது மக்கள் மற்றும் போராளிகள் என இரு பிரிவினரும் அலெப்போ நகரத்தில் இருந்து வெளியேறலாம் என்று ரஷியா முன்மொழிந்தது.
ஆனால், பல கிளர்ச்சி குழுக்கள் ஏற்கனவே இதை நிராகரித்தனர். செப்டம்பர் மாதம் முறிந்த போர் நிறுத்தத்திற்குப் பின், அலெப்போ மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று சிரியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|