ரகானேயின் தந்தை கைது!

Sunday, December 17th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருவரான அஜின்கே ரஹானேயின் தஃதை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தோடு தனது சொந்த இடமான மும்பையில் வசித்து வருகின்றார்.

ரஹானேவின் தந்தை உட்பட சிலர் பிரயாணம்  செய்துகொண்டிருந்த கார் வேகமாகச் சென்று வயோதிபப் பெண்ணை மோதியுள்ளது. படுகாயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 67 வயதானவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயணித்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கரை செலுத்தியவர் யார் என்கின்ற தகவல் வெலியாகவில்லை.

Related posts: