யானைத் தந்த வர்த்தகத்திற்கு  முடிவு கட்டியது சீனா!

Tuesday, January 3rd, 2017

உலகின் மிகப்பெரிய யானை தந்த சந்தையான சீனா, இந்த வருடத்தின் இறுதியில் தனது அனைத்து விதமான யானைத்தந்த சந்தைகளையும் முழுமையாக தடை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்காவில் நடந்த, அருகிவரும் உயிரினங்களைச் சந்தைப்படுத்தும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகின் மிகப் பெரிய யானைத் தந்த சந்தையை சீனா கொண்டுள்ளதுடன்,உலகின் 70 சதவீதமான யானை தந்த வர்த்தகம் சீனாவில் நடப்பதாகவும் சில கருத்துக்கள் உள்ளன.

இதே வேளை சீனாவில் ஒரு கிலோ யானைத் தந்தம் சுமார் ரூ 71,355, அதாவது 1,100 அமெரிக்க டாலர்கள் அல்லது 850 பிரிட்டன் பவுண் மதிப்பீட்டினை கொண்டுள்ளதாகவும், இந்த முடிவினால் யானைகளின் உயிர் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் மாநில கவுன்சில் இந்தத் தடை குறித்த விவரங்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 _93205155_gettyimages-162220197

Related posts: