மூன்றாவது வல்லரசு நாடாக உருவாகிறது பாகிஸ்தான் – அமெரிக்கா தகவல்!
Monday, November 21st, 2016உலகின் மூன்றாவது வல்லரசாக பாகிஸ்தான் உருவாகி வருகின்றது என்று அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தனது அணு ஆயுத அளவை 130-140 ஆக விரிவுபடுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அணு ஆயுத விஞ்ஞானிகளாக ஹன்ஸ் எம் கிறிஸ்டன்சன், ரோபர்ட் எஸ் நோரிஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பின்வருமாறு:
பாகிஸ்தான் தனது அணு ஆயுத அளவை 130-140 ஆக விரிவுபடுத்தியுள்ளது. அவற்றில் சிலவற்றை போர் ஜெட்களாகவும் மாற்றி வருகிறது. பாகிஸ்தானின் இராணுவமுகாம்கள் மற்றும் விமானப்படைத் தளங்களின் செய்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3ஆவது பெரிய நாடாக பாகிஸ்தான், போர் ஆயுத உற்பத்தியையும் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவின் பாதுகாப்பு உளவுத்துறை 1999ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2020ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அணு ஆயுத எண்ணிக்கை 60-80ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதே 130-140 அணு ஆயுதங்களைப் பாகிஸ்தான் வைத்திருக்கின்றது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அணு ஆயுதம் வைத்திருக்கும் உலகின் 3ஆவது பெரிய நாடாக பாகிஸ்தான் உருவாகும். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்தி மறறும் நேமிப்பு 2-3 மடங்காக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|