முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை டிரம்ப் வாபஸ் வாங்க வேண்டும்- ஐ.நா.!

Saturday, February 4th, 2017

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முஸ்லிம் நாடுகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஏழு அரபு, இஸ்லாமிய நாட்டு பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதித்துள்ள தடை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நா. செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எனக் கூறி  ஏழு நாடுகளின் பிரஜைகளை நாட்டுக்குள் நுழையவிடாது தவிர்ப்பது தீர்வாக மாட்டாது. இது இன்னும் பகைமையையே ஏற்படுத்தும் எனவும் ஐ.நா. செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil-Daily-News-Paper_17108881474

Related posts: