மியான்மரிலும் நிலநடுக்கம்!

Thursday, August 25th, 2016

மியான்மரின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது.

தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சகோதரிகள் உள்பட, இந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்களும், பழமையான பல கோவில்களும் இந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளதக செய்திகள் தெரிவிக்கின்றன.முன்னதாக, நேற்று மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: